ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி உறவினருக்கு சொந்தமான N.R கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தில் மூன்றாவது நாளாக இன்றும் (ஜனவரி 9) வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் என்.ராமலிங்கம். இவர் ஈரோடு செட்டிபாளையத்தில் N.R கன்ஸ்ட்ரக்சன் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தேசிய நெடுஞ்சாலை திட்டம், ஸ்மார்ட் மீட்டர் திட்டம், நீர்பாசன கால்வாய் திட்டம் என பல ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு அரசு கட்டுமான ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், மூன்றாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் என்.ராமலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுமட்டுமின்றி ஈரோடு ரகுநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஆர்பிபி கட்டுமான நிறுவன உரிமையாளர் செல்வ சுந்தரத்தின் வீடு, அலுவலகம் மற்றும் முள்ளாம்பரப்பில் உள்ள கட்டுமான அலுவலகம் ஒன்றிலும் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
திருப்பதியில் கூட்ட நெரிசல் : தமிழக பெண் உட்பட 6 பேர் பலி.. யார் காரணம்?
மகர விளக்கு: சபரிமலையில் பக்தர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்
டாப் 10 நியூஸ் : பொங்கல் பரிசு வழங்கும் ஸ்டாலின் முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழை வரை!