கடற்கரையில் காற்று வாங்க வரும் காதலர்களை குறிவைத்து மிரட்டி, வழிப்பறியில் ஈடுபட்டு வந்த டம்மி போலீசை தட்டித்தூக்கியுள்ளனர் ரியல் போலீஸ். puducherry dummy police caught
புதுச்சேரியில் பைக் ஒன்று திருடு போன வழக்கு தொடர்பாக, க்ரைம் போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் சிக்கிய ஒரு நபரின் போட்டோவை இந்திய குற்றப்பிரிவு சாஃப்ட்வேர் மூலம் ஒப்பிட்டு பார்த்தனர்.
போலீசாரின் இந்த தேடுதலில், பல நாட்களாக டிமிக்கி கொடுத்து வந்த கடலூர் மாவட்டம் விருதாச்சாலம் சின்னகாப்பான் குளத்தைச் சேர்ந்த போலி போலீஸ் சிவராமன் என்பது தெரியவந்தது. அதன்பிறகு அவர் பதுங்கியுள்ள இடத்தை கண்டுபிடித்து புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்.

ஷாக்கான போலீஸ்!
அவரிடம் நடத்திய விசாரணையில், போலீசாரே ஷாக்காகும் அளவுக்கு தகவல்களை கொட்டியுள்ளார் டம்மி போலீஸ் சிவராமன்…
”என் சொந்த ஊரு கடலூர் மாவட்டம் இப்போது பெங்களூருவில் செட்டில் ஆகிவிட்டேன். பெங்களூருவில் இருந்து புதுச்சேரி, கடலூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் போது அந்த பகுதிகளில் ஒரு பைக்கை திருடுவேன். அதில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு மஃப்டி போலீஸ் போல ரவுண்ட்ஸ் போவேன். அப்போது கடற்கரையில் காற்று வாங்க வரும் காதலர்களிடம் சென்று, ’இந்த பக்கம் என்ன பண்றீங்க? உங்க பேரு என்ன? எந்த ஊரு? நீங்க வந்திருக்குறது வீட்டுக்குத் தெரியுமா? உங்க அப்பா அம்மாவுக்கு போன் பண்ணுங்க’ என்று மிரட்டுவேன். puducherry dummy police caught
அவர்கள் பயந்தபடி, ’சார் எங்கள விட்ருங்க… வீட்டுக்கு தெரியாது சார்’ என்று கெஞ்சுவார்கள். உடனே ஸ்டேஷன் வாங்க என்று அதட்டி கூப்பிடுவேன். அவர்கள் என் காலில் விழுந்து கதறுவார்கள். கொஞ்ச நேரம் கழித்து அவர்களிடம் செயின், பணம் இருந்தால் வாங்கிவிட்டு போலீசை போல அட்வைஸ் செய்து அனுப்பி விடுவேன். puducherry dummy police caught
திருமணம் ஆன ஜோடி வந்தால், முதலில் அவர்களிடம் ஆதார் கார்டு, ஐடி கார்டு வாங்கி செக் செய்வேன். அவர்கள் கள்ளக்காதல் ஜோடி என்று தெரிய வந்தால் உங்க வீட்டுக்காரருக்கு போன் பண்ணுங்க… அவர் நம்பரை கொடுங்க என்று மிரட்டுவேன். ஒரு கட்டத்தில் அவர்களே பயந்து அவர்களிடமுள்ள பொருளையோ பணத்தையோ எடுத்து கொடுத்துவிடுவார்கள்.
நகை, பணம் கொள்ளை!
ஒருவேளை அவர்களிடம் நகையோ, பணமோ இல்லையென்றால் ஸ்டேஷனில் வந்து பைக்கை எடுத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு பைக்கை எடுத்துச் சென்றுவிடுவேன்.
இப்படித்தான் கோட்டக்குப்பம் பீச்சில் குழந்தையுடன் ஒரு ஜோடி ஒதுக்குப்புறமாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் சென்று இருவர் பெயரையும் கேட்டேன். அந்த குழந்தையிடம் உங்க அப்பா பெயர் என்ன? இவர் உங்க அப்பாவா? என கேட்டேன். அந்த குழந்தை இவர் என் அப்பா இல்லை என்று சொன்னதும் அவர்களை மிரட்ட ஆரம்பித்தேன்.
உடனே அந்த பெண் ’சார் இனிமே இதுபோன்ற தவறை செய்ய மாட்டோம். இவர் எங்க சொந்த மாமா தான்’ என்று கதறினார். அவர்களின் நம்பர், அட்ரஸ் வாங்கியதும் பயந்து போய் அவர்களிடம் இருந்ததை கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.
பெரும்பாலும் புதுச்சேரியில் ஏமாந்தவர்கள் யாரும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க மாட்டார்கள். தமிழகத்தில் தான் சிலர் வழிப்பறி செய்ததாக புகார் கொடுத்து சிக்கிக்கொண்டேன். 2016-ஆம் ஆண்டிலிருந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறேன்” என்று அதிர்ச்சிகரமான வாக்குமூலம் கொடுத்துள்ளார் சிவராமன்.

கம்பி எண்ணும் சிவராமன்
இதுகுறித்து புதுச்சேரி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “புதுவை, கடலூர் கடற்கரை பகுதிகள், சாலையோரம், பார்க் பகுதிகளில் தனிமையில் ஒதுங்கும் காதலர்களை குறிவைத்து சிவராமன் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பெங்களூருவில் வசித்து வரும் சிவராமன், வாரத்திற்கு ஒருமுறை புதுச்சேரி, கடலூர் பகுதிகளுக்கு வந்து வழிப்பறியில் ஈடுபட்டுவிட்டு பெங்களூவுருக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
தமிழகத்தில் இவர் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. சிவராமன் புகைப்படத்தை சமூக வலைதளம் மற்றும் பத்திரிகைகளில் வெளியிட்டு வேறு யாரேனும் இவரால் பாதிக்கப்பட்டிருந்தால் புகார் அளிக்குமாறு அறிவித்துள்ளோம்” என்கிறார்கள்.
பல நாட்களாக ரியல் போலீசுக்கு கல்தா கொடுத்து வந்த டம்மி போலீஸ் சிவராமன் தற்போது ஜெயிலில் கம்பி எண்ணி வருகிறார். puducherry dummy police caught