வெளிப்படையான நிர்வாகத்தை பின்பற்றி கள ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என சென்னை மாநகராட்சியின் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் கூறியுள்ளார்.
23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை மாநகராட்சியின் ஆணையராக கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ரிப்பன் மாளிகையில் இன்று (மே 15) பொறுப்பேற்று கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மற்றும் இணை ஆணையர்கள் ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “தமிழ்நாடு முதலமைச்சர் மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பளித்து வரலாற்று சிறப்புமிக்க மாநகராட்சியில் பொறுப்பேற்று இருப்பதற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மாநகராட்சி என்பது உலகத்திலேயே இரண்டாவது பழமையான மாநகராட்சி என்பது நமக்கு தெரியும். நமக்கு நிறைய வேலைகள் இருக்கிறது, முதலமைச்சர் எங்களுக்கு இதுகுறித்து நிறைய அறிவுரைகளை அளித்துள்ளார்.
களப்பணியில் என்னுடைய தனிப்பட்ட முறையில் இந்த மாநகராட்சியின் ஆணையராக 2000 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை மாநகராட்சி ஆணையராக இருந்தேன் அப்பொழுது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தார்.
தற்பொழுது எங்களுக்கு சிறப்பு மிக்க ஐ.ஏ.எஸ் குழு உள்ளது. குறிப்பாக மாநகராட்சி என்பது பொதுவாக சாலை மட்டுமல்ல சாலை திடக்கழிவு மேலாண்மை சுகாதாரம், கல்வி அனைத்தையும் உள்ளடக்கியது.
கல்வியில் மிக முக்கியமாக 1996 முதல் 2000 வரை சிறப்பான முறையில் செயல்பட்டு வந்தது தற்பொழுது கூட தேர்ச்சி விகிதம் மிகவும் சிறப்பாக இருந்தது.
பொது மக்களின் குறைகளை தீர்ப்பதற்கும், பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை மாநகராட்சி இடம் இருக்கிறது. கட்டிடங்கள் கட்டுவதற்கான உத்தரவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாநகராட்சியின் தொடர்பு இருக்கும்.
வர்த்தகத்துறையிலும் சென்னை மாநகராட்சி மிக முக்கியமாக இருக்கிறது.
அனைத்து பணியாளர்கள் நலன் குறித்து நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்வதற்கு இந்த குழுவுடன் இணைந்து செயல்படுவோம்.
ஏற்கனவே பணியாற்றி அனுபவம் இருந்தாலும் கூட எப்பொழுதும் ஒரு புது வேலையை தொடங்கும் போது பணிவாக தொடங்க வேண்டும் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது” என்றார்.
மேலும், அனைத்து துறையினுடைய பிரதிநிதிகளிடம் கலந்து ஆலோசித்து எவ்வாறு இதை இன்னும் சிறப்பாக கொண்டு செல்வது என்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மக்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க முதலமைச்சரின் எண்ணங்களுக்கு இணங்க பணியாற்ற உள்ளதாகவும் வெளிப்படையான நிர்வாகத்தை பின்பற்றுவேன் என்றும், கள ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும் கூறினார்.
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை நலம் விசாரித்த முதல்வர்