மீனவர்கள் இன்றும், (பிப்ரவரி 16) நாளையும் (பிப்ரவரி 17) கடலுக்கு செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். தென் தமிழ்நாட்டின் ஓரிரு பகுதிகளில் இன்று லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளை பொறுத்தவரை வறண்ட வானிலையே நிலவக்கூடும்,” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வங்கி கணக்கு முடக்கம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: மல்லிகார்ஜூன கார்கே