Rain Update: அடுத்தடுத்து மூணு நாளைக்கு மழை இருக்காம்!

தமிழகம்

தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மழை இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இன்றும் (ஏப்ரல் 5), நாளையும் (ஏப்ரல் 6) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல் 7, 8, 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களுக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Vidaamuyarchi: இந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா?

ஈரோட்டில் அதிகபட்சமாக 44.4° செல்சியஸ், சேலத்தில் 40.6° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 40.5° செல்சியஸ், திருப்பத்தூரில் 40.2° டிகிரி செல்சியஸ் மற்றும் தருமபுரியில் 40.௦° டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 38.1° செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 35.6° செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37°-38° டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

கடலோர தமிழக மாவட்டங்கள்: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சிறையிலிருந்தே காய் நகர்த்தும் செந்தில் பாலாஜி…திணறவைக்கும் விஜயபாஸ்கர்…சூடுபிடித்துள்ள கரூர் களம்!

IPL 2024: ‘அது ஒரு ஆக்சிடென்ட்’… பஞ்சாப்பிற்கு எதிராக தெறிக்கும் மீம்ஸ்கள்!

2021 தேர்தலிலும் இதே இவிஎம் மெஷின் தான்… திமுக வழக்கில் தேர்தல் ஆணையம் வாதம்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *