தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் தென் தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி வருகிறது.
பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள், சாலைகளை பெருமழையால் ஏற்பட்ட வெள்ள மூழ்கடித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தொடர்ந்து பெய்து வரும் அதிகனமழை காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
தென் மாவட்டங்களை உலுக்கும் கனமழை… முப்படைகளின் உதவி கோரியது தமிழக அரசு!