குறுகிய நிலப்பரப்பிற்கும் வானிலை முன்னறிவிப்புகள் வழங்கும் வகையில் புதிய முயற்சியை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் மேற்கொண்டுள்ளது.
அண்மை காலமாக பல்வேறு பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது ஊரில், குறுகிய நேரத்தில் அதிகளவில் மழை பொழிவது அதிகமாக நடக்கிறது.
இதனால் மாவட்ட அளவில் கொடுக்கக்கூடிய வானிலை முன்னறிவிப்புகளை குறுகிய நிலப்பரப்புக்கும் கொடுக்க வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை எழுந்து வந்தது.
இதனையடுத்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சோதனை முறையில் தாலுகா அளவில் வானிலை முன்னறிப்புகளை வழங்க புதிய முயற்சியை எடுத்துள்ளது.
இதன்படி ரேடார் மற்றும் கணினி மாதிரி கணிப்புகளின் மூலம் தாலுகா அளவில் வானிலை முன்னறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
முன்பு சென்னையில் ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டு வந்த நிலையில், ஆலந்தூர், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் என தாலுகா அளவில் மழை பெய்வதற்கான வானிலை முன்னறிவிப்பை சோதனை அடிப்படையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது.
இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் பணி மேற்கொள்வது எளிதாகும் என்றும், மழையினால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… ஒரே நாளில் ரூ.1.12 கோடி பறிமுதல்!
கிச்சன் கீர்த்தனா : பசலைக்கீரை கபாப்