மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் பகுதியில் மே 14 ஆம் தேதி கள்ளச்சாராயம் அருந்தியதில் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் முண்டியம்பாக்கம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று (மே 16) காலை வரை 13 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது, பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனிடையே மே 14 ஆம் தேதி கெட்டுப்போன சாராயம் விற்கப்பட்டதாக எக்கியார்குப்பம் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வழக்கமாக வெள்ளை நிறத்தில் இருக்கும் சாராய பாக்கெட்டுகள் அன்றைய தினம் மஞ்சள் நிறத்தில் இருந்ததாகவும் மண்ணில் புதைக்கப்பட்டுப் பல நாட்கள் ஆன சாராயம் விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வழக்கமாக ஒரு சாராய பாக்கெட் ரூ.25 முதல் 50-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அன்றைய தினம் 5 பாக்கெட் ரூ.100 என விற்பனை செய்யப்பட்டதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மோனிஷா
’பதவிக்காக முதுகில் குத்த மாட்டேன்’: உறுதியளித்த டி.கே. சிவகுமார்
லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை!