விதிமுறைகளை மீறிய நம்பர் பிளேட்: போலீசார் அதிரடி!

தமிழகம்

சென்னை  போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட பல பகுதிகளில் முறையான நம்பர் பிளேட் இல்லாமல் சென்ற வாகனங்களை போக்குவரத்து போலீசார் மடக்கிய சம்பவம் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கையை அளித்துள்ளது.

மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 பிரிவு 50 மற்றும் 51-ன்படி வாகனங்களின் நம்பர் பிளேட்களில் உள்ள எழுத்துகள் மற்றும் எண்களின் பின்னணி நிறம், அளவு மற்றும் குறிப்பிட்ட இடைவெளிகள் இருக்க வேண்டும் எனவும், பிற வாசகங்கள், சின்னங்கள் அல்லது படங்கள் நம்பர் பிளேட்களில் ஒட்டவும்/ எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சமீபகாலமாக, மோட்டார் வாகன சட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளின்படி நம்பர் பிளேட் பொருத்தாமல், பல்வேறு அளவுகள் மற்றும் வாசகங்களுடன் நம்பர் பிளேட்களை பொருத்தியும், பலர் பார்ப்பதற்கு எளிதில் தெரியாத அளவுக்கு மாடலாகவும், கலர் கலராகவும் வைத்து இருக்கிறார்கள். விதிமுறைப்படி வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் பொருத்த வேண்டும் என்று போலீசார் எச்சரித்தும் பலர் கண்டு கொள்வதில்லை.

இந்த நிலையில் நேற்று போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது விதிமுறை மீறி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் மடக்கி பிடித்தனர். வாகனங்களில் இருந்த விதவிதமான நம்பர் பிளேட்டுகளை அதிரடியாக அகற்றினர்.

அங்கேயே அந்த மோட்டார் சைக்கிள்களுக்கு விதிமுறைபடி உள்ள புதிய நம்பர் பிளேட் மாற்றப்பட்டது. கார்களும் இந்தச் சோதனையில் தப்பவில்லை. 

விதிமுறை மீறி நம்பர் பிளேட் உள்ள வாகனங்களுக்கு நேற்று ஒருநாள் மட்டும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கவில்லை. வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பினர்.

இனிவரும் நாட்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
1
+1
1
+1
2
+1
4
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.