முறைகேடாக பட்டம்: சென்னை பல்கலை ஊழியர்கள் சஸ்பெண்ட்!

தமிழகம்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 116 பேர் முறைகேடாக பட்டம் பெற முயன்ற விவகாரத்தில் உதவி பதிவாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் தேர்வு நடைபெற்றபோது, சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்காத பலரும் தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த விசாரணையில், 1980-81ம் கல்வியாண்டு முதல் விடுபட்டு போன தேர்வை மீண்டும் எழுதலாம் என பல்கலைக்கழகம் வாய்ப்பு வழங்கியது.

ஆன்லைன் முறையில் நடைபெற்ற தேர்வில் நேரடியாக கண்காணிப்பாளர் இல்லாததால் முறைகேடாக பலரது பதிவெண்களும் தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்றிருந்தன. 

இதையடுத்து சம்பந்தப்பட்ட தேர்வர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க துணைவேந்த்தர் கௌரி உத்தரவிட்டார்.

மேலும் இந்த மோசடி குறித்து விசாரிக்க பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தின் சட்டபடிப்புகள் துறை இயக்குனர் சொக்கலிங்கம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அந்தக்குழு நடத்திய விசாரணையில் உதவி பதிவாளர் தமிழ்வாணன், ஊழியர் எழிலரசி, அலுவலக உதவியாளர் ஜான் வெஸ்லின், ஊழியர்கள் மோகன்குமார், தேர்வுப்பிரிவு ஊழியர் சாந்தகுமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து 5 பேரை பணியிடை நீக்கம் செய்து பல்கலை நடவடிக்கை எடுத்துள்ளது.  

சஸ்பெண்ட் நடவடிக்கை குறித்து ஊழியர்கள் தரப்பில் இரண்டு வாரத்தில் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்,  அவர்கள் கொடுக்கும் விளக்கத்தை தொடர்ந்து அடுத்த சிண்டிகேட் கூட்டத்தில் அவர்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் துணைவேந்தர் கௌரி இன்று (அக்டோபர் 10) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கலை.ரா

சுப்பு ஆறுமுகம் மறைவு: தலைவர்கள் இரங்கல்!

அலறிய அத்வானி… கதறிய கரசேவகர்கள் : யார் இந்த முலாயம் சிங்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *