தமிழக இசை ரசிகர்களை மட்டுமில்லாமல் இசை ரசிகர்கள் எங்கெல்லாம் உள்ளார்களோ அவர்கள் அனைவரையும் தனது இசையால் கட்டிப்போட்டவர் இளையராஜா.
எழுபதுகள் தொடங்கி கடந்த 50 வருடங்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து சாதனைப் படைத்துள்ள இளையராஜாவுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு நாட்டின் 2வது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இளையராஜாவை கவுரவிக்கும் வகையில் மாநிலங்களவை நியமன எம்.பியாக நியமித்து மத்திய அரசு அறிவித்தது. அதன்படி அவரும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நகராட்சியில் மாநிலங்களவை எம்.பி என்ற முறையில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 9 லட்சம் மதிப்பீட்டில் 16 மீட்டர் உயர் கோபுர மின்விளக்கு அமைத்து கொடுத்துள்ளார் இளையராஜா.
அந்த உயர்கோபுர மின்விளக்கு அமைத்ததற்கான கல்வெட்டின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இளையராஜாவை பாராட்டி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அண்ணாமலை, ரகுமான் சர்ச்சையில் சிக்கிய அதிகாரிகளுக்கு பதவி!
டெல்டாவில் போராட்டம்… 3,000 கனஅடி காவிரி நீர் வழங்க உத்தரவு!