சென்னை ஐஐடி-யில் ‘எஸ்சிஎம் புரோ’ படிப்பு: முழு விவரம் இதோ!

Published On:

| By Raj

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (சென்னை ஐஐடி) சென்டர் ஃபார் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன்’ (Centre for Outreach and Digital Education- CODE) மையம், சிஐஐ இன்ஸ்டிட்யூட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘விநியோகச் சங்கிலி மேலாண்மை வல்லுநர்’ (Supply Chain Management Professional –  எஸ்சிஎம் புரோ) சான்றிதழ் படிப்புத் திட்டத்தை மீண்டும் தொடங்குகிறது.

‘எஸ்சிஎம் புரோ’ எனப்படும் விநியோகச் சங்கிலி மேலாண்மை என்பது… ஒரு பொருள், மூலப்பொருட்களில் இருந்து முடிக்கப்பட்ட இறுதி தயாரிப்புகள் வரையிலான முழுமையான மேலாண்மையைக் குறிக்கும். இறுதிப் பொருளை நுகர்வோருக்கு வழங்குவது வரையிலான முழு செயல்முறையையும் இது உள்ளடக்கியிருக்கும்.

இந்தத் துறையில் உள்ள வல்லுநர்கள், முன்னறிவிப்பு, சரக்கு மற்றும் போக்குவரத்தில் செயல்திறனை அதிகப்படுத்துதல், செலவுகளைக் குறைத்தல், பொருட்களின் வர்த்தகத்தைப் புரிந்துகொள்வது மற்றும் விநியோகச் சங்கிலி நெட்வொர்க்குகளை சீரமைப்பது ஆகியவற்றின் மூலம் தங்கள் நிறுவனத்தின் விநியோகச் சங்கிலியை மேம்படுத்துவார்கள்.  

இந்த நிலையில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (சென்னை ஐஐடி) சென்டர் ஃபார் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன்’ (Centre for Outreach and Digital Education- CODE) மையம், சிஐஐ இன்ஸ்டிடியூட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘விநியோகச் சங்கிலி மேலாண்மை வல்லுநர்’ (Supply Chain Management professional –  எஸ்சிஎம் புரோ ) சான்றிதழ் படிப்புத் திட்டத்தை மீண்டும் தொடங்குகிறது. IIT Madras Launches SCM Pro course

இதுதொடர்பாக வெளியாகி உள்ள செய்திக்குறிப்பில், “கடந்த 10 ஆண்டுகளில் ‘எஸ்சிஎம் புரோ’ சான்றிதழ் திட்டத்தின்கீழ் ஏற்கனவே 40,000-க்கும் மேற்பட்ட வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சிஐஐ இன்ஸ்டிடியூட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ் உயர்மட்ட கல்வி நிபுணத்துவத்துடன் கூடிய பாடத்திட்டத்தை ஒருங்கிணைத்து இதனை மேம்படுத்த உள்ளது.

இந்தப் புதிய பாடத்திட்டம், பங்கேற்பாளர்களுக்கு மேம்பட்ட திறன்களையும் விநியோகச் சங்கிலி மேலாண்மை குறித்த உலகளாவிய நுண்ணறிவையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. போட்டிகள் நிறைந்த துடிப்புமிக்க தொழில்துறையில் அவர்கள் சிறந்து விளங்க இந்தப் படிப்பு உதவிகரமாக இருக்கும்.

தகவல் தொழில்நுட்பம், மின்வணிகம், சில்லறை விற்பனை, நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள், சரக்குப் போக்குவரத்து போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் வல்லுநர்களும், பொறியியல், வணிகம், அறிவியல், வணிக மேலாண்மைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் இதற்கான பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடத்திட்டத்தில் சேருவதற்கு பதிவு செய்வதற்கான கடைசி நாள்  2025  மார்ச் 31. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்  https://code.iitm.ac.in/supply-chain-management-professional-certification-scm-pro இணைப்பின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share