மூன்றாம் ஆண்டு பி.டெக் படித்து வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கு சென்னை ஐஐடி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஆந்திராவை சேர்ந்த புஷ்பக் ஸ்ரீ சாய் என்ற மாணவர் சென்னை ஐஐடி விடுதியில் தங்கி பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இன்று (மார்ச் 14) புஷ்பக் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருடைய அறை கதவு நீண்ட நேரமாக மூடி இருந்ததால் சக மாணவர்கள் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படாததால், மாணவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது புஷ்பக் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து சென்னை ஐஐடி தரப்பில் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த கோட்டூர்புரம் போலீசார் மாணவர் புஷ்பக் ஸ்ரீ சாய் உடலைக் கைபற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவரின் மரணம் தொடர்பாக போலீசார் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். விடுதி வார்டன் மற்றும் சக மாணவர்கள், நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னை ஐஐடியில் கடந்த மாதம் எம்.எஸ். எலெக்ட்ரிக்கல் இன்ஜினீரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டீபன் சன்னி ஆல்பர்ட் என்ற மாணவர் விடுதி அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், மேலும் ஒரு மாணவர் விடுதி அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வரும் நிலையில், சென்னை ஐஐடி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
அந்த விளக்கத்தில், ”கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஐஐடி மாணவர்கள் பல்வேறு சமூக அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.
பொருளாதாரம், குடும்பப் பிரச்சனை, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் அவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க முடிவதில்லை.
மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் தொடர்ந்து கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. மாணவன் புஷ்பக் தற்கொலை தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளது.
மோனிஷா
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
கழிப்பறை இருக்கையை விட அதிகம்: தண்ணீர் பாட்டிலில் ஒளிந்திருக்கும் ஆபத்து!
அப்படினா ஏன் ஒரு பார்பன மாணவர் கூட தற்கொல செய்து கொள்ளவில்லை?