IIT Madras - Chennai Metro Corporation's new charter!

மாதம் ரூ.30,000 உதவித்தொகை… சென்னை ஐஐடி – மெட்ரோ புதிய பட்டயப்படிப்பு!

தமிழகம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் ஐஐடி சென்னை இணைந்து உதவித் தொகையுடன் கூடிய புதிய பட்டய படிப்பை அறிமுகம் செய்துள்ளது.

சென்னை ஐஐடியுடன் இணைந்து சமீபத்தில் பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகளுக்கு மெட்ரோ ரயில் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை (பி.ஜி.டி.எம்.ஆர்.டி.எம்) என்ற ஒரு வருட முதுநிலை பட்டயப் படிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்க உள்ளது.

இந்த பட்டயப் படிப்பில் பொறியியலில் இளங்கலை அல்லது பி.டெக் முடித்தவர்கள் சேரலாம் என்றும், ஜூன் 29ஆம் தேதிக்குள் careers.chennaimetrorail.org என்ற இணையதளத்தில் இந்த பட்டயப் படிப்பிற்காக விண்ணப்பிக்கலாம் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

IIT Madras - Chennai Metro Corporation's new charter!

IIT Madras - Chennai Metro Corporation's new charter!

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களுக்கு படிப்பின்போது மாதம் ரூ.30,000 உதவித் தொகை வழங்கப்படும். பட்டயப் படிப்பு முடிந்தவுடன் அவர்கள் நேரடியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உதவி மேலாளராக மாதம் ரூ.62,000 ஊதியத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

சிவில், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், மெக்கானிகல் இன்ஜினியரிங் முடித்து 70 சதவீத மதிபெண்கள் எடுத்தவர்கள், பி.டெக் மற்றும் கேட் தேர்வில் தகுதியான மதிப்பெண் பெற்றவர்கள் இந்த பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

மெட்ரோ ரயில் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பட்டயப் படிப்பு குறித்த கூடுதல் தகவல்களை 044-24378000 என்ற எண் அல்லது http://chennaimetrorail.org என்ற இணையதள பக்கத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹஜ் பயணத்தில் 1,301 பேர் உயிரிழந்த சோகம்… காரணம் இதுதான்!

மீனவர்கள் கைது: இன்று வேலை நிறுத்தப் போராட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *