ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகாரை விரைவாக விசாரித்து முடிக்க சி.பி.சி.ஐ.டி. மற்றும் விசாகா கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநராக இருந்த ஐ.ஜி முருகன், தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதே துறையில் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவர் புகாரளித்திருந்தார்.

அந்த புகாரின் மீது அரசு நடவடிக்கை எடுக்காததால் பெண் எஸ்பி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, 2019ம் ஆண்டு ஐ.ஜி. முருகன் தொடர்ந்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும்  பரத சக்கரவர்த்தி  அமர்வில் இன்று(நவம்பர் 4) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், முருகன் மீதான புகாரை விசாரிக்க ஏற்கனவே அமைக்கப்பட்ட விசாகா குழு தற்போது மாற்றியமைக்கப்பட்டதாக கூறி அறிக்கை தாக்கல் செய்தார்.

ஏற்கனவே அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் தற்போதைய விசாகா கமிட்டி விசாரிப்பதில் ஆட்சேபனை இல்லை என்று முருகன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஐ.ஜி. முருகனுக்கு எதிரான பாலியல் புகாரை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டுமென சி.பி.சி.ஐ.டி. மற்றும் விசாகா கமிட்டிக்கு  உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

கலை.ரா

“குஜராத்தை விட தமிழகத்தில் பால் விலை குறைவு” – நாசர்

திமுக நிர்வாகி மீது தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்பூ புகார்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts