ஏடிஎம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் திருட்டில் ஈடுபடுவது இது தான் முதல் முறை என்று வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நேற்று (பிப்ரவரி 12) 4 ஏடிஎம்களில் ரூ.72 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது.
கொள்ளையர்களை பிடிக்க காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் திருவண்ணாமலையில் இன்று வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “ஒரு குறிப்பிட்ட வெளிமாநில கும்பல் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று முறையும், மத்திய பிரதேசத்தில் 2 முறையில், ஒடிசா மற்றும் அசாம் மாநிலங்களில் தலா ஒரு முறையும் நடந்துள்ளது.
ஏடிஎம் தொழில்நுட்பம் தெரிந்த நபர்களே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏடிஎம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் திருட்டில் ஈடுபடுவது இது தான் முதல் முறையாகும்.
குற்றவாளிகளை பிடிப்பதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் குறித்து எங்களுக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளது. வங்கி ஏடிஎம்மில் அலாரத்தை டி ஆக்டிவேட் செய்துவிட்டு கொள்ளை அடித்துள்ளார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
முடிந்தது மாநிலங்களவை முதல் அமர்வு: நேரம் விரயமென அவைத் தலைவர் வருத்தம்!
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு: அபராதத்துடன் மனு தள்ளுபடி!