ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.5 கோடி லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆருத்ரா நிதி நிறுவனம் போல் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனமும் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிறுவனம் 89 ஆயிரம் பேரிடம் 6 ஆயிரம் கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மோசடி வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்திடம் ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக விசாரணை அதிகாரி டிஎஸ்பி கபிலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக இவர் நிதி நிறுவன நிர்வாகிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்கள் வெளிநாடு தப்பிச் செல்வதற்கும் உதவியாக இருந்தது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து பெற்ற லஞ்சம் மூலம் சொத்துக்கள் வாங்கியது பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
டிஎஸ்பி கபிலன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் லஞ்சம் வாங்கியது உறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
அணு ஆயுதங்களை பயன்படுத்தினால்… ரஷ்யாவை எச்சரித்த ஜி-7 நாடுகள்!