யானைகளை பாதுகாக்க தீவிரம் காட்டாவிட்டால் அடுத்த 10 ஆண்டுகளில் அவைகளை பார்க்கவே முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வனம் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று (நவம்பர் 28) விசாரணைக்கு வந்தன.
அப்போது சமீபத்தில் தாளவாடி உள்ள பகுதிகளில் மின்வேலியில் சிக்கி நான்கு யானைகள் மரணமடைந்த விவகாரத்தை நீதிபதிகள் சுட்டிக்காட்டி, யானைகளை பாதுகாக்க அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்றும், மின்வேலி அமைப்பதற்கு எதிராக விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
இல்லாவிட்டால் அடுத்த 10 ஆண்டுகளில் யானைகளை பார்க்கவே முடியாது என்று வேதனை தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்த துரதிர்ஷ்டமான சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், இதுதொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
உத்தரகாண்ட் : தொழிலாளர்களை மீட்க இன்னும் 3-4 மணிநேரம் ஆகும்!
ஞானவேலின் பின்னால் சிவகுமார், சூர்யா, கார்த்தி: கரு பழனியப்பன் சந்தேகம்!
மீண்டும் போலீஸாக விஜய் ஆண்டனி: ‘வள்ளி மயில்’ டீசர் ரிலீஸ்!