அடுத்தடுத்த போராட்டங்கள்… அரசு ஊழியர் சங்கத்தினரின் அதிரடி!

Published On:

| By Kavi

முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவர் ஆக்குவோம் என்று அறிவித்த அரசு ஊழியர் சங்கத்தினர், அடுத்தடுத்த போராட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளனர்.

அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் பொதுச் செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் கடந்த நவம்பர் 9ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

அதில், “பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. புதிய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதன் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் துரோகம் இழைத்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் சந்தித்துப் பேசுவார் என்றால் 2026-இல் அதை அவருக்கு பரிசளிக்க அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” தெரிவித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து நாளை 12ஆம் தேதி அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து, ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு செய்ய உள்ளனர். 2025 பிப்ரவரி 8ஆம் தேதி கோரிக்கை மாநாடு நடத்துவது, பிப்ரவரி 20ஆம் தேதி ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள்வதென அரசு ஊழியர்கள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

ஆட்சியாளர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் அரசு ஊழியர்களின் முடிவு தொடர்பாக சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வியிடம் பேசினோம்

அவர், “தொகுப்பூதிய ஊழியர்கள், மதிப்பூதிய ஊழியர்கள், சிறப்பு காலமுறை ஊழியர்கள் ஆகியோரை காலமுறை ஊதியர்களாக அங்கீகரித்து பென்ஷன் கொள்கையை அறிவிக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் கலைஞர் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் 25 சதவிகித பணி வாய்ப்பு வழங்கினார்.

ஆனால் அவருடைய மகன் ஸ்டாலின் 25 சதவிதத்தை 5 சதவிகிதமாக குறைத்துவிட்டார்.

ஆண்டுதோறும் அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் விடுப்பு உள்ளது. அதற்கான விடுப்பு சரண்டர் தொகையயும் கடந்த 4 ஆண்டுகளாக வழங்கவில்லை. இந்த தொகை மொத்தம் 2000 கோடி ரூபாய் ஆகும். இதெல்லாம் அரசு ஊழியர்களின் பணம்.
17 ஆவது ஊதியக்குழு அறிவித்த சம்பள உயர்வு தொகை 21 மாதம் நிலுவையில் இருக்கிறது.

தமிழ் வழியில் படித்த மாணவர்கள் குரூப் 4 தேர்வில் ஒருவர்கூட தேர்ச்சி பெறமுடியவில்லை. ஆங்கில வழியில் படித்தவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

1.4.2003ல் பழைய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தி அப்போது முதல் பிடிக்கப்பட்ட பென்ஷன் தொகையான 72,000 கோடி பணத்தை இந்த அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக அறிகிறோம். அந்த பணத்தை அரசு ஊழியர்களுக்கே உரிய முறையில் சேர்க்க வேண்டும்.

தமிழக அரசு துறையில் காலியாக உள்ள 6.25 லட்சம் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இவைதான் அரசு ஊழியர்களின் கோரிக்கை.

முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று 71-வது பிறந்த நாள்: பெரியார், அண்ணா, கருணாநிதி  நினைவிடங்களில் மரியாதை | CM mk Stalin s 71st birthday today - hindutamil.in

இதை நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களை எதிரியாக பார்ப்பது… ஆட்சிக்கு சிறப்பல்ல. இந்த கோரிக்கைகளை வலியுறுத்திதான் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கிறோம்” என்று கூறினார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசு ஊழியர் சங்கங்களின் இந்த அதிரடியான போராட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

மதுரா டிராவல்ஸ் உரிமையாளர் வி.கே.டி.பாலன் காலமானார்!

தேசியமும் திராவிடமும் பிரித்து பார்க்க முடியாதவை… அப்பாவு போட்ட போடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel