புதிய வாக்காளர்களுக்கு ஒரு மாதத்தில் அடையாள அட்டை!

Published On:

| By Selvam

தமிழகத்தில் புதிதாக வாக்காளர்களாக சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு ஒரு மாதத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் பேசியபோது, ”நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிகாரிகளுக்கு படிப்படியாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மதுரை, திருச்சி, கோவை பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள தேர்தல் தொடர்பான காவல்துறை பொறுப்பு அதிகாரிகளுக்கு டெல்லியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் முதல்கட்ட சரிபார்த்தல் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மக்களவை தேர்தலுக்காக தமிழகத்துக்கு கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி தர கேட்கப்பட்டுள்ளது.

புதிதாக வாக்காளர்களாக சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு ஒரு மாதத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படும். புதிதாக பெயர் சேர்க்கவும் பெயர் நீக்கப்பட்டிருந்தால் மீண்டும் சேர்க்கவும் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் பட்சத்தில், வேட்பாளர்கள் இறுதி வேட்பு மனு தாக்கலுக்கு 10 நாட்கள் முன்பு வரை பெயர் சேர்க்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பேக்கடு பாஸ்தா

அச்சத்தில் ஜே.எம்.எம் தலைவர்கள்: ஜார்க்கண்டில் நடக்கும் ஜனநாயக படுகொலை!

ஒத்த டயலாக்ல கில்லியவே சாச்சிட்டாரே ஐயா : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share