ஐஸ்கிரீம்களின் விலை நாளை (மார்ச் 3) முதல் உயர்த்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு அத்தியாவசியமான பால் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பாலுடன், அதனை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் மோர், தயிர், வெண்ணெய், நெய், ஐஸ்க்ரீம், இனிப்பு பலகாரங்கள் உள்பட பல்வேறு பால் பொருட்களையும் ஆவின் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், ஐஸ்கிரீமின் விலையை 2 முதல் 5 ரூபாய் வரை உயர்த்தி ஆவின் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, 65 மில்லி ஆவின் சாக்கோபார் ரூ.5 அதிகரித்து 25 ரூபாய்க்கும், 125 மிலி பால் – வெண்ணிலா ரூ.2 அதிகரித்து 30 ரூபாய்க்கும் விற்கப்பட உள்ளது.
அதே போன்று, 100 மிலி கிளாசிக் கோன் – வெண்ணிலா ரூ.5 அதிகரித்து 35 ரூபாய்க்கும், 100 மிலி கிளாசிக் கோன்35 ரூபாய்க்கும் விற்பனைக்கு வர உள்ளது.
மேலும் இந்த விலை உயர்வானது நாளை முதல் அமலுக்கு உடனடியாக வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை நெருங்க, நெருங்க குழந்தைகள், இளைஞர்களுக்கு பிடித்த ஜஸ்க்ரீம் விற்பனை அமோகமாக இருக்கும். இதனால் தனியார் நிறுவனங்கள் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் பல ஆஃபர்களை வழங்கும்.
இந்த நிலையில் அதற்கு நேர்மாறாக, ஐஸ்கிரீம் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சத்தமின்றி முத்தம் தா : விமர்சனம்!
ஜவாஹிருல்லா, வேல்முருகனுக்கு திமுக அழைப்பு: வைகோவுக்கு செக்!