தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று (அக்டோபர் 12) வெளியிட்டுள்ள உத்தரவில்,
வணிகவரித் துறை செயலாளராக இருந்த தீரஜ் குமார் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளராக இருந்த குமரகுருபன் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நிதித்துறை செலவினங்கள் பிரிவு செயலாளராக குமரகுருபன் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்றும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா சுற்றுலாத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குனராக இருந்த சந்தீப் நந்தூரி தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காவரி நீரை திறக்க உத்தரவு: மீண்டும் மறுத்துள்ள கர்நாடக அரசு!