மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கோவை ஒழுங்கு நடவடிக்கை ஆணையரான தேவ் ராஜ் தேவ் அறிவியல் நகர திட்ட துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளராக உள்ள அருண் ராய்க்கு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு இணை செயலாளர் ஆகாஷ் தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற கழகத்தின் சிப்காட் நிர்வாக இயக்குநராக நியமனம்.
மாநில தொழில்கள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் நிஷாந்த் கிருஷ்ணா, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமனம்.
செல்வம்