சென்னை மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி அருணாவை நியமித்து தமிழ்நாடு அரசு இன்று (ஜூன் 17) உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியராக கடந்த 2022 மே 26 முதல் செயல்பட்டு வந்தார் ஐஏஎஸ் அமிர்த ஜோதி. இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அமிர்த ஜோதியை அச்சு மற்றும் எழுதுபொருள் துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
அச்சு மற்றும் எழுதுபொருள் துறை இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி அருணாவை சென்னை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமித்தும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
மோனிஷா