“மீண்டும் வருவேன்” : மிரட்டிய ஞானசேகரன்… முடிவெடுத்த மாணவி!

Published On:

| By Kavi

அண்ணா பல்கலையில் கடந்த 23ஆம் தேதி பொறியியல் படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், கூடுதல் ஆணையர் கண்ணன், மயிலாப்பூர் துணை ஆணையர் ஹரிகிரன் பிரசாத், அடையாறு துணை ஆணையர் பொன் கார்த்திக்குமார் மற்றும் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் என ஒரு பெரிய டீமே விசாரித்து வருகிறது.

பாதிக்கப்பட்ட மாணவியிடம் போலீசார் விசாரித்த போது, “23ஆம் தேதி இரவு காலேஜ் ஸ்டூடெண்ட் மாதிரிதான் வந்தான். என்னுடன் இருந்த ஆண் நண்பரை மிரட்டி அவனை முழுமையாக வீடியோ போட்டோ எடுத்துக்கொண்டு, அவனது ஐடி கார்டையும் போட்டோ எடுத்துக்கொண்டு, ’அமைதியாக ஓடிவிடு வெளியில் சொல்லாதே…. இந்த பெண்ணுக்கு(மாணவி) ஏதாவது ஆனால் நீதான் காரணம் என்று வீடியோவை எச்.ஓ.டி.க்கும், டீனுக்கும் அனுப்பிவிடுவேன். நீதான் போலீசிடம் மாட்டிகொள்வாய்’ என மிரட்டி அனுப்பி வைத்துவிட்டான்.

என்னையும் தனியாக போட்டோ வீடியோ எடுத்துக்கொண்டு, என்னுடைய ஐடி கார்டையும் போட்டோ எடுத்துக்கொண்டு, ‘ஓரல் செக்ஸ்’க்கு மிரட்டினான்.
அப்போது யாரிடமோ போனில் பேசி, ’ஒன்றும் பிரச்சினை இல்லை சார் வந்துவிடுவேன்’ என்று சொன்னான். அவனிடம் பேசியது எங்கள் யூனிவர்சிட்டியில் சம்பந்தப்பட்ட ஒருவரிடம் பேசியது போலத்தான் தோன்றியது.

முடிவில், என்னை முழுமையாக வீடியோ எடுத்துக்கொண்டு, ’இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் வருவேன். நீயும் வரவேண்டும்… இதே போல இருக்க வேண்டும்… இல்லையென்றால் இந்த வீடியோ வெளியாகும்’ என்று பயங்கரமாக மிரட்டினான். இது இரவு முழுவதும் என்னை வாட்டி எடுத்தது. என் தோழிகளிடம் நான் பகிர்ந்தேன். இந்த வீடியோவை காட்டி கடைசி வரை மிரட்டுவான் என்பதால், இதற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கதான் புகார் கொடுக்க முன்வந்தேன்” என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து கைதான ஞானசேகரனிடம் விசாரித்த போலீசார் இந்த மாணவி போல அண்ணா பல்கலை கழகத்தில் எத்தனை மாணவிகளை மிரட்டி வைத்திருக்கிறாய் என்று கேட்டு, அவனது செல்போனை பிடுங்கி போலீசார் பார்த்துள்ளனர்.
அதில் பல பெண்களின் போட்டோக்களும் இருந்ததை பார்த்து போலீசாரே அதிர்ச்சியடைந்துள்ளனர்.

“அவன் எந்த பெண்ணுடன் இருக்கிறானோ, அதை போட்டோவாகவும் வீடியோவாகவும் எடுத்துக்கொண்டிருக்கிறான். இதில் உள்ள சில வீடியோக்களை பார்த்த போது, சில பெண்களின் முகபாவனையை பார்க்கும் போது கட்டாயப்படுத்தியிருப்பது போல் இருக்கிறது.

இதுபோன்ற வீடியோக்களை பார்க்கும் போது, அவனை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கோபம் வந்தது. சட்டத்தின் பிடியில் இருப்பதால் எதையும் செய்ய முடியவில்லை” என்று ஒரு அதிகாரி ஆதங்கப்பட்டார்.

“இந்த ஞானசேகரன் மீது ஏற்கனவே அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள நூலகத்தில் திருடியதாக ஒரு வழக்கு உள்ளது, 2018ல் காஞ்சிபுரத்தில் திருட்டு வழக்கில் குண்டர் சட்டத்திலும் கைதாகியுள்ளான்.

செங்கல்பட்டு மற்றும் சென்னை மாநகரங்களில் உள்ள சில காவல்நிலையங்களிலும் திருட்டு மற்றும் வழிபறி வழக்குகளும் உள்ளன. இதே அண்ணா பல்கலைக் கழகத்தில் சில பெண் ஊழியர்களிடமும், மாணவிகளிடமும் கைவரிசை காட்டியிருக்கிறான்” என்கிறார்கள் விசாரணையில் இருந்து வரும் அதிகாரிகள்.

அவர்களிடம், இந்த சம்பவத்தின் போது, யாரிடமோ சார், சார் என்று போனில் பேசியதாக அந்த மாணவியின் வாக்குமூலத்தில் உள்ளதாக சொல்கிறார்களே என்று கேட்டோம்…

“பல சந்தேகங்களுக்கு, அவனது போன் கால் டீடெய்ல்ஸை எடுத்து பார்த்தோம். அப்போது அந்த குறிப்பிட்ட நேரத்தில் அவனுக்கு அழைப்பு எதுவும் வரவும் இல்லை… போகவும் இல்லை… அந்த மாணவியை மிரட்டுவதற்காக யூனிவர்சிட்டி பேராசிரியரிடம் பேசுவது போல் நடித்திருக்கிறான்” என்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

வணங்காமுடி

விடா முயற்சி ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்: வைப் மோடில் அஜித் ரசிகர்கள்… ’சவதீகா’ என்றால் என்ன தெரியுமா?

‘ஒரு சிறந்த மனிதர், உண்மையான நண்பர்’ : மன்மோகன் சிங் மறைவுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share