ஆருத்ரா மோசடி வழக்கில் துபாயில் தலைமறைவாக இருந்த ஆர்.கே.சுரேஷ் இன்று (டிசம்பர் 12) பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்பு நேரில் ஆஜராகியுள்ளார். aarudhra gold case rk suresh reply
சென்னையை தலைமையிடமாக கொண்டு ’ஆருத்ரா கோல்டு டிரேடிங்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனம் 1,09,255 பேரிடம், ரூ.2,438 கோடி வரை பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
ஆர்.கே.சுரேஷ் தலைமறைவு!
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் சுமார் 40 பேர் மீது வழக்கு பதிவு செய்த தமிழக காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார், 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் நடிகர், படத் தயாரிப்பாளர் மற்றும் பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷ் ஆருத்ரா நிறுவனம் தொடர்புடையவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி பலமுறை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் ஆஜராகாமல் இருந்து வந்த நிலையில் துபாயில் தலைமறைவானதாக கூறப்பட்டு வந்தது.
சென்னை திரும்பினார்!
இதனால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.
அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும், டிசம்பர் 12ஆம் தேதி (இன்று) பிரமாண பத்திரம் தாக்கல் செய்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன் என்றும் ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்து அவரை கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்துவந்த ஆர்.கே.சுரேஷ் சுமார் 8 மாதத்திற்கு பின்பு கடந்த 10ஆம் தேதி காலை துபாயிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், நீதிமன்ற உத்தரவினை எடுத்துக்கூறி அங்கிருந்து வெளியேறினார்.
நான் தலைமறைவாகவில்லை!
அதனைத்தொடர்ந்து இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜராக வந்தார்.
அப்போது அவரிடம் ’தலைமறைவானது ஏன்’ என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “”எல்லாமே இங்கு இருக்கும்போது நான் ஏன் தலைமறைவாக இருக்க வேண்டும்? நான் தலைமறைவாகவில்லை” என்று பதிலளித்தபடி விசாரணைக்காக உள்ளே சென்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் பிறந்தநாள் – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
ரூ.46 ஆயிரத்திற்கு கீழ் சென்ற தங்கம் விலை!
aarudhra gold case rk suresh reply