ஒரு ஷவர்மா சாப்பிட்டதால் 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்ததாக இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் பிரபலமான பிரேமம் பட இயக்குநர் நேரம் படத்தை இயக்கியதன் மூலம் தமிழில் அறிமுகமானார். இவருடைய இயக்கத்தில் பிரித்விராஜ், நயன்தாரா நடித்த ”கோல்டு” திரைப்படம் வெளியானது.
சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் மந்தி பிரியாணி சாப்பிட்ட 20 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரு செவிலியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
இந்த செய்தி குறித்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன், “15 ஆண்டுகளுக்கு முன் என் நண்பர் ஷராஃப் உதீன் ஷவர்மா வாங்கிக்கொடுத்தார். மயோனைஸ் உடன் அந்த ஷவர்மாவை சாப்பிட்டேன்.
அடுத்த நாள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். என்னைக் குணப்படுத்த என் பெற்றோர் ரூ. 70,000 செலவு செய்தார்கள்.
இதற்காக என் நண்பர் மீது காரணமே இல்லாமல் கோபம் வந்தது. ஆனால் என்னுடைய உடல் நலக்குறைவிற்கு கெட்டுப்போன அசுத்தமான உணவு தான் காரணம். இங்கே உண்மையான குற்றவாளி யார்? கண்களைத் திறந்து உண்மையைப் பாருங்கள்.
வாழ்க்கை மிகவும் விலை உயர்ந்தது “ என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
வெளிநாட்டிலிருந்து வந்த 40 பேருக்கு பிஎஃப்-7 தொற்று!
சூர்யா கொடுத்த ‘ஜெய்பீம்’ அப்டேட்!