கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரும் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்பவரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், தொடர்ந்து தம்பதிகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் சங்கீதாவுக்கு அரசு பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 40 ஆயிரம் சம்பளம் வாங்க தொடங்கியுள்ளார். அதிக சம்பளம் வந்ததும் குறைந்த சம்பளம் வாங்கும் கணவர் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
பழனிவேல் ரூ.15000 சம்பளத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இதனால், இருவருக்கிடையே பிரச்சனை எழுந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் இதுவே அவர்களது பிரிவுக்கு காரணமாக அமைந்தது. தொடர்ந்து இருவரும் அடிக்கடி சண்டையிட்டு கொண்ட நிலையில், சங்கீதா வாடிப்பட்டியில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
அங்கு, சிக்கன் கடை நடத்தி வரும் தினேஷ் குமார் என்பவருக்கும் சங்கீதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து தாய் வீட்டில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து திருமணம் தாண்டிய உறவில் இருந்துள்ளனர். இதனை தெரிந்து கொண்ட பழனிவேல், தொடர்ந்து சங்கீதாவை கண்காணித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பழனிவேல் உறவினர்களுடன் வந்து பிரச்சனை செய்துள்ளார்.
அப்போது, அரசு பள்ளியில் வேலை பார்க்கும் தான் 15,000 சம்பளம் வாங்கும் பழனிவேலுடன் வாழ முடியாது என்று கூறியுள்ளார். பின்னர், பழனிவேலை டைவர்ஸ் செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 12) இரவு வழக்கம் போல தினேஷ்குமார் சங்கீதாவின் வீட்டுக்கு வர, பழனிவேல் மரத்தில் ஏறி எட்டிப் பார்த்து இருவரும் தனிமையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியைடைந்துள்ளார். உடனடியாக, அவர்களை வீட்டுக்குள்ளேயே வைத்து பூட்டி உள்ளார்.
தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்களையும் காவல் துறையினரையும் அழைத்து புகார் தெரிவித்தார். அப்போது வெளியே வந்த சங்கீதா தான் பழனிவேலுக்கு டைவர்ஸ் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகவும் போலீசாரிடம் கூறினார்.
ஆனால் டைவர்ஸ் வழங்காத நிலையில், வேறு ஒருவருடன் தன் மனைவி இருப்பது எப்படி நியாயம் ? என்று பழனிவேல் கேட்டுள்ளார். இவ்வளவு நடந்தும் தினேஷ்குமார் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. பின்னர், போலீசார் தினேஷ் குமாரை வெளியே அழைத்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
– எம்.குமரேசன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேற லெவல் படம்… ‘டிமான்ட்டி காலனி 2’ பார்த்து மிரண்டுபோன விநியோகஸ்தர்!
வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!
Comments are closed.