வளர்ப்புத் தாய் நரபலி கொடுக்க இருப்பதால் தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்தவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 22 ) மனு தக்கல் செய்துள்ளார்.
அதில் , ”எனது வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா, மாந்திரீகங்களிலும் மூட நம்பிக்கைகளிலும் நம்பிக்கை கொண்டவர். அவர் என்னை நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளார். ஏற்கனவே எனது பத்து வயது சகோதரனையும் மேலும் இரண்டு பேரையும் அவர் நரபலி கொடுத்துள்ளார். எனது குடும்ப உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதாலும் பாஜகவில் செல்வாக்குடன் இருப்பவர்கள் என்பதால் அவர் மீது போலீசில் புகாரளிக்க யாருக்கும் தைரியம் இல்லை” என்று கூறியுள்ளார்.
மேலும் , தான் ஏ.பி.வி.பி அமைப்பில் இருந்து ராஜினாமா செய்து விட்டதாகவும் , போபாலில் சட்டக்கல்லூரி மாணவியான தக்ஷிணா மூர்த்தியின் உதவியால் தான் தமிழகத்திற்கு வந்ததாகவும் , பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்பதால் தான் பிப்ரவரி 17 ஆம் தேதி இங்கு வந்தேன் என்றும் தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கியிருக்கும் என்னை குடும்பத்தினரும் ஏ.பி.வி.பி அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்துச் சென்று விடுவார்கள் என அச்சப்படுகிறேன். வலுக்கட்டாயமாக என்னை போபாலுக்கு அழைத்து சென்று விட்டால் என்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது, எனவே தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு, நீதிபதி சந்திரசேகரன் முன் நாளை (பிப்ரவரி 23 )விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சீமான் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!
நேற்று திருமா… நாளை சீமான்… அண்ணாமலைக்கு எதிராக காயத்ரி ரகுராமின் பக்கா ப்ளான்!