மனிதச் சங்கிலி : உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

தமிழகம்

சமய நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்டக் கட்சிகள் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்,  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூட்டாக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

மனுவில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மதச்சார்பின்மையை வலியுறுத்தும் வகையில் சமய நல்லிணக்க மனித சங்கிலி நடத்த அனுமதி கேட்டு கடந்த 29ஆம் தேதி காவல்துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வந்த நிலையில் மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து கடந்த 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டியே எந்த நோட்டீசும் அனுப்பாமல், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்.

அக்டோபர் 2 ஆம் தேதியே ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த இருப்பதாகக் கூறி, தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதவாத அமைப்பான ஆர்எஸ்எஸ்  அமைப்பையும், தங்களையும் ஒரே மாதிரியாக பாவிக்க முடியாது என்பதால், சமய நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

 இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

கலை.ரா

ஓசி டிக்கெட் : மூதாட்டி மீது வழக்குப்பதிவு!

இந்தியாவில் 5ஜி சேவை தொடக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *