காணும் பொங்கல்: சென்னை கடற்கரைகளில் ஒரு லட்சம் பேர்; 235 டன் குப்பை!

தமிழகம்

காணும் பொங்கலை கொண்டாட சென்னையில் உள்ள கடற்கரைகளில் லட்சக்கணக்கானோர் கூடினர். அவர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக், பாட்டில்கள் போன்ற குப்பையை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், கடந்த இரண்டு நாட்களாக அகற்றினர். அதன்படி, 235 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தலங்கள், கடற்கரைகளில் மக்கள் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு (2022) கொரோனா தொற்று குறைந்து வந்த நேரத்திலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, 2022 ஆண்டு ஞாயிற்றுக்கிழமையில் காணும் பொங்கல் வந்ததால், மக்கள் வெளியில் செல்ல தடை இருந்தது.

இப்படியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக காணும் பொங்கல் களை இழந்து இருந்தது.

வழக்கமாக காணும் பொங்கலையொட்டி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரைகள், சுற்றுலா தலங்களில் சுமார் 3 லட்சம் முதல் 5 லட்சம் வரையில் மக்கள் கூடுவார்கள்.

huge pongal celebration at Marina

கொரோனா தொற்று ஓரளவுக்கு குறைந்துவிட்ட நிலையில்,  இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, காணும் பொங்கல் பண்டிகை  தமிழகம் முழுவதும் களை கட்டியது. அந்த வகையில் இந்த ஆண்டு சுமார் 4 லட்சம் முதல் 5 லட்சம் வரையில் மக்கள் திரண்டதாக தகவல்கள் தெரிவித்தன.

அதில் சென்னை மெரினாவில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு, மக்கள் அதிகம் கூடும் கடற்கரை பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதன்படி, மெரினா கடற்கரையில் கூடுதலாக 103 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு, 45 தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

மேலும், சேகரமாகும் குப்பையை உடனுக்குடன் எடுத்து செல்ல ஒரு ‘காம்பேக்டர்’ வாகனமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

அதேபோல், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், 50 குப்பை தொட்டிகளும், 20 பணியாளர்களும், பாலவாக்கம் கடற்கரையில், 15 பணியாளர்கள்,

இரண்டு பேட்டரி வாகனங்கள், ஒரு டிராக்டர், ஒரு மெக்கானிக்கல் ஸ்வீப்பர் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.

நீலங்கரை கடற்கரையில், ஒவ்வொரு வேலை நேரத்திலும் சுழற்சி முறையில் கூடுதலாக ஆறு துாய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் காணும் பொங்கல் கொண்டாட சென்னையில் உள்ள கடற்கரைகளில் லட்சக்கணக்கானோர் கூடினர்.

அவர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக், பாட்டில்கள் போன்ற குப்பையை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், கடந்த இரண்டு நாட்களாக அகற்றினர். அதன்படி, 235 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது.

-ராஜ்

“சிலர் மைக்கை பார்த்தாலே டென்ஷன் ஆகின்றனர்” – ஜெயக்குமார்

கிச்சன் கீர்த்தனா : டேஸ்ட்டி பிரெட் டிரையாங்கிள்ஸ்

பீதியை கிளப்பிய பிரேஸ்வெல்… ‘த்ரில்’ வெற்றியை போராடி பெற்ற இந்தியா

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *