இரண்டு நாட்களாக அஜீரணம் போன்ற அறிகுறிகள் இருக்கும். அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்வார்கள். திடீரென இறந்து விடுவார்கள். மருத்துவர்கள், மாரடைப்பால் மரணம் அடைந்ததாகச் சொல்வார்கள்.
அஜீரணமா, ஹார்ட் அட்டாக்கா… இரண்டையும் எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்ற சந்தேகம் பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறோம். பலரும் அஜீரணம் என்ற எண்ணத்தில் ஹார்ட் அட்டாக் அறிகுறிகளை அலட்சியம் செய்கிறார்கள். இதுபோன்ற அறிகுறிகளை உணரும்போது, அதற்கான சுய வைத்தியம் செய்து கொள்வார்கள்.
உண்மையில், “பல நேரங்களில் மருத்துவர்களாலேயே இதை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ஏனெனில் அஜீரணத்தைப் போன்ற அறிகுறிகள், வயிற்றுப் பிரச்சினைகளாலும் வரலாம்… இதய பாதிப்பாலும் வரலாம். அது சாதாரண வயிற்றுப் பிரச்சினை என அலட்சியப்படுத்தி, ஒருவேளை அது ஹார்ட் அட்டாக் அறிகுறியாக இருந்தால், உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தால், இசிஜி பரிசோதனை, சில ரத்தப் பரிசோதனைகள் செய்வார்கள். தேவைப்பட்டால் அடுத்தடுத்த பரிசோதனைகளைச் செய்வார்கள். அதுவரை உயிருக்கு ஆபத்து இருக்காது. எனவே முகம், வயிறு, நெஞ்சுப் பகுதி போன்ற இடங்களில் அசாதாரண அறிகுறிகளை உணர்ந்தால் அலட்சியம் செய்யாமல், உடனே மருத்துவரை அணுகுங்கள். இந்த விஷயத்தில் அலட்சியமாக இருப்பது தான் பலரது மரணத்துக்கு காரணமாக இருக்கிறது” என்கிறார்கள் இதயநோய் மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
“இத்தோட நிறுத்திக்கங்க”: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை எச்சரித்த சமுத்திரக்கனி