கிச்சன் கீர்த்தனா: உணவின் மூலம் அல்சரைத் தடுக்கலாமா?
‘‘டீ, காபி வேண்டாம்… ஸாரி, எனக்கு அல்சர்” இந்த டயலாக் அடிக்கடி கேட்போம். வாழ்க்கை முறை மாற்றத்தால், நாம் விலைக்கு வாங்கிய நோய்களில் இதுவும் ஒன்று. இந்த அல்சரை உணவின் மூலம் தடுக்கலாமா?
முதலில் அல்சர் எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வது நல்லது.
சமச்சீர் உணவு சாப்பிடாமல் இருப்பது, அதிக மசாலா, எண்ணெய் உணவுகள், உணவுப் பழக்கத்தில் மாற்றம், காலை உணவைத் தவிர்த்தல், மனப் பிரச்சினையால் அமிலங்கள் சுரப்பதில் மாற்றங்கள், வீரியமுள்ள வலி மாத்திரைகள், ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்வது, மது மற்றும் புகைப்பழக்கமும் அல்சரை ஏற்படுத்தும்.
70 சதவிகித உணவு மற்றும் வாழ்வியல் தவறுகளால்தான் அல்சர் ஏற்படுகிறது.
இதற்கான காரணங்களை முறையாகக் கண்டறிந்து, தகுந்த சிகிச்சைகளை மேற்கொண்டு, அல்சரை குணமாக்கிவிடலாம்.
குறிப்பாக நம் தென்னிந்திய உணவுகள் ‘நல்ல உணவு’ பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த உணவைச் சாப்பிட்டாலே, அல்சர் வருவதை வெகுவாகக் குறைக்கலாம்.
ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளுக்கு முதலிடம் தரலாம். எண்ணெய், உப்பு, மசாலா, காரம் இவற்றைக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம்.
தேன், புரொக்கோலி, முட்டைகோஸ், வெங்காயம், பூண்டு, பால் பொருட்கள், வாழை, அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் அல்சரை குணமாக்க உதவும்.
அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் கோலா பானங்கள், சோடா, ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிட்ரஸ் வகை ஆயத்த பழச்சாறுகள், டீ, காபி தவிர்ப்பது நல்லது.
கிச்சன் கீர்த்தனா: வெஜிடபிள் சால்ட் லஸ்ஸி!
கிச்சன் கீர்த்தனா: தேங்காய் டிலைட்