கோடையில் அனைவராலும் விரும்பப்படுவது ஃப்ரூட் ஜூஸாகத்தான் இருக்கும். ஆனால், ஜூஸாகக் குடிக்கும்போது பழங்களில் உள்ள நார்ச்சத்து நீங்கிவிடும். அப்படிப்பட்ட நிலையில் ஃப்ரூட் சாலட்டாக சாப்பிடலாம். அத்துடன் சிறிதளவு கிழங்கு மற்றும் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த வெஜ் – ஃப்ரூட் சாலட் கோடைக்கேற்ற எனர்ஜி சாலட்டாக அமையும்.
என்ன தேவை?
வேகவைத்த உருளைக்கிழங்கு, வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு, தக்காளி, வெள்ளரிக்காய், பச்சை மிளகாய் – தலா ஒன்று
மாதுளை முத்துகள் – ஒரு கப்
தேன் – 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
சாட் மசாலா, உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
வேகவைத்த உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் உரித்து பொடியாக நறுக்கவும். தக்காளி, வெள்ளரிக்காய், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். இவற்றை ஒன்று சேர்த்து, கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்துக் கலந்து பரிமாறவும். ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து, ஜில்லென்றும் பரிமாறலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மேத்தி ரைஸ்
கிச்சன் கீர்த்தனா : கொத்தமல்லி கார பால்ஸ்