சாம்பாரைவிட காரக்குழம்பு, வத்தக்குழம்பு போன்றவற்றை சாதத்தோடு சாப்பிட பலரும் விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ், சுவையில் அசத்தும் இந்த வடகம் புளிக்குழம்பு.
என்ன தேவை?
காய்ந்த கொத்தமல்லி – 2 டீஸ்பூன் How To Make Vadagam Puli Kuzhambu
புளிக்கரைசல் – 100 கிராம்
மஞ்சள்தூள், வறுத்துப் பொடித்த தனியாத்தூள் – தலா அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒன்றரை ஸ்பூன்
வறுத்த வடகம் – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
எப்படிச் செய்வது?
காய்ந்த கொத்தமல்லியை எண்ணெய் விடாமல் கடாயில் வாசனை வரும்வரை வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசலை சேர்க்கவும். அதனுடன் தனியாத்தூள் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து கொதிக்கவிடவும். கலவை நன்றாக கொதிக்கும்போது தனியாத்தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு, பின்னர் இறக்கவும்.