ஒவ்வோர் ஊர் திருமணத்திலும் அந்த வட்டார பிரபல உணவு வகை ஒன்று, திருமண விருந்தில் நிச்சயம் இடம்பெறும். அந்த வகையில் தூத்துக்குடி திருமண விருந்தில் இடம்பெறும் இந்த தக்காளி ஜாமை நீங்களும் செய்து அசத்த இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
தக்காளி – அரை கிலோ
சர்க்கரை – 400 கிராம்
முந்திரி – 25 கிராம்
கிஸ்மிஸ் (உலர் திராட்சை) – 50 கிராம்
நெய் – 25 கிராம்
பேரீச்சை – 100 கிராம்
எப்படிச் செய்வது?
கடாயில் நெய் சேர்த்து, உருகியதும் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை கெட்டியாகும்போது, கொட்டை நீக்கி பொடியாக நறுக்கிய பேரீச்சை, கிஸ்மிஸ் (உலர் திராட்சை) சேர்த்து நன்றாக கிளறவும். பேரீச்சையை நன்கு கலந்து, கலவை ஜாம் பதம் வந்ததும், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்.. உணவுகளை வீணாக்காமல் இருப்பது எப்படி?