கிச்சன் கீர்த்தனா: தண்டாய்

தமிழகம்

உஸ்… அப்பாடா… – வெயில் காலத்தில் வீட்டில் நுழைந்து உட்கார்ந்த உடனேயே பலரும் விடும் பெருமூச்சு ஒலி இது. பெருமூச்சு விட்ட  கொஞ்ச நேரத்திலேயே குளுமையான, சுவையான ஒரு டம்ளர் பானம் கையில் கிடைத்தால், கொண்டாட்டம்தான். வட இந்தியாவில் பிரபலமான இந்த தண்டாயை வீட்டிலேயே தயாரித்து குடும்பத்தினருடன் நீங்களும் கோடையைக் கொண்டாடலாம்.

என்ன தேவை?

பாதாம் – 10
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
மிளகு – 10
சர்க்கரை – அரை கப்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
பன்னீர் ரோஜா – 2 (இதழ்களை எடுத்துக்கொள்ளவும்)
காய்ச்சி, ஆறவைத்து, ஃப்ரிட்ஜில் குளிர்வித்த பால் – அரை லிட்டர்

எப்படிச் செய்வது?

பாதாமை சூடான நீரில் ஊறவைத்து எடுத்து, தோலுரித்து, மையாக அரைக்கவும். மிளகைப் பொடிக்கவும். பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து ஒரு கரண்டி தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.

கொதித்து ஒரு கம்பி பதத்தில் பாகு வரும்போது, அரைத்த பாதாம் சேர்த்து கலந்துவிடவும். பொடித்த மிளகு, மஞ்சள்தூள், குங்குமப்பூ, 4 இதழ்கள் தவிர மீதமுள்ள ரோஜா இதழ்கள் சேர்த்து, அடுப்பை அணைத்து, பாத்திரத்தை மூடிவிடவும். நன்கு ஆறியபின், குளிர்ந்த பால் சேர்த்துக் கலந்து மேலாக ரோஜா இதழ்களால் அலங்கரித்து, `ஜில்’லென பரிமாறவும்.

ஐஸ்க்ரீம், கூல் டிரிங்ஸ் சாப்பிட்டதும் சளி… தீர்வு உண்டா?

பலாக்காய் பிரியாணி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *