கிச்சன் கீர்த்தனா: குஞ்சாலாடு!

Published On:

| By Kavi

இன்று ஆங்கிலப் புத்தாண்டு. இந்த நாளில் பேக்கரிகளில் கிடைக்கும் ஐட்டங்களை வாங்கிச் சாப்பிடுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்குச் சத்தான பலகாரங்கள் தெரியாமலே போயிடும் நிலையில்… நம்முடைய பாரம்பரிய உணவான இந்த குஞ்சாலாடு செய்து அறிமுகப்படுத்தலாமே? இந்த நாளை சிறப்பாக கொண்டாடலாமே?  

என்ன தேவை?

பயத்தம் மாவு – 2 கப்
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
நெய் – அரை லிட்டர்
வெல்லம் – 2 கப்
தண்ணீர் – இரண்டரை கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

முதல் நான்கு பொருள்களையும் அகலமான பாத்திரத்தில் கொட்டி, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்துக் கையால் அல்லது பிளெண்டரால் கரைக்கவும். கலவை பஜ்ஜி மாவு பதத்தில் இருக்க வேண்டும். 2 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். கடாயில் நெய் சேர்த்துச் சூடாக்கவும்.  தீயைக் குறைத்து மிதமாக வைக்கவும். பூந்திக் கரண்டியைக் கடாயின் மேல் பிடித்துக்கொண்டு, தயாராக உள்ள கலவையை அதில் விட்டுக் கடாயில் உள்ள நெய்யில் விழும்படிச் செய்யவும்.  பூந்தியைப் பொன்னிறத்துக்குப் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் நீரைச் சூடாக்கிப் பொடித்த வெல்லம் சேர்த்துக் கெட்டியான பாகு தயாரிக்கவும். இதற்கு 10 முதல் 12 நிமிடங்கள் தேவைப்படும். பாகில் கொப்புளங்கள் வர ஆரம்பித்தால் தீயைக் குறைத்து விடவும்.

ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் தண்ணீர் வைத்துக்கொள்ளவும். பாகில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து அதில் விட்டால் உருட்டும் பதத்தில் இருக்க வேண்டும். அதை வெளியில் எடுத்துத் தட்டில் போட்டால் சத்தம் வர வேண்டும். அப்படிவந்தால் அது சரியான பதம். அடுப்பை அணைத்துவிடலாம். பாகில் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.

அகலமான தாம்பாளத்தில் தயாராக உள்ள பூந்தியைப் பரப்பவும்.  அதன் மேல் கொஞ்சம் கொஞ்சமாகப் பாகை விட்டு, தட்டையான கரண்டியால் கலக்கவும். பொறுக்கும் சூட்டில் கையில் நெய் தடவிக்கொண்டு சின்னச் சின்ன லட்டுகளாக உருட்டவும். காற்றுபுகாத டப்பாவில் நிரப்பி வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமலிருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: மாநிலத் தலைவர் ஆவேன்- சபதமிட்டு டெல்லி சென்ற தமிழிசை… அமைதியைத் தேடி அண்ணாமலை

மெல்பர்னில் டிராவிஸ் ஹெட் செய்தது என்ன? சித்து காட்டமான பின்னணி!

நகராட்சியாக தரம் உயரும் கன்னியாகுமரி

ஹேப்பி நியூ இயர்… இளமை இதோ இதோ… உருவான கதை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share