வீட்டில் இருக்கிற பொருளை வைத்து இன்றைய வீக் எண்ட் நாளை எப்படி கழிக்கலாம் என்று நினைப்பவர்கள் ரிலாக்ஸாக இந்த இந்தியன் ஸ்டைல் பாஸ்தாவை, இருவிதமாக செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம். வீக் எண்டை கொண்டாடலாம்.
என்ன தேவை?
பாஸ்தா – 200 கிராம்
மஞ்சள் – கால் டீஸ்பூன்
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
கடலை எண்ணெய் – சிறிதளவு
கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
மிளகாய்த்தூள், மல்லி (தனியா)தூள் – தலா அரை டீஸ்பூன்
இஞ்சி – ஓர் அங்குலத் துண்டு
பூண்டு – 4 பற்கள்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்
ரெட் சில்லி சாஸ் – ஒரு டீஸ்பூன்
டொமேட்டோ சாஸ் – ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
குடமிளகாய் – ஒன்று
நறுக்கிய கேரட், பீன்ஸ் – கையளவு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எப்படி செய்வது?
செய்முறை 1…
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயம் போடவும். பிறகு கடுகு, சீரகம் சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய், கேரட், பீன்ஸ், நசுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். வதக்கியபிறகு, பாஸ்தாவைக் கொதிக்கவைத்த நீரில் ஐந்து நிமிடங்கள் போட்டு எடுத்து வடிகட்டி பிறகு, வெந்த பாஸ்தாவை கடாயில் போட்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு கலந்து வேக வைக்கவும். இந்தியன் ஸ்டைல் பாஸ்தா ரெடி.
செய்முறை 2…
செய்முறை 1-ல் செய்தபடி செய்து, அவற்றோடு சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன், ரெட் சில்லி சாஸ் – ஒரு டீஸ்பூன், டொமேட்டோ சாஸ் – ஒரு டீஸ்பூன் சேர்க்கவும். இதன் சுவையும் அருமையாக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..
கிச்சன் கீர்த்தனா: பாஸ்தா சிக்கன் மசாலா!
கிச்சன் கீர்த்தனா: முட்டை மசாலா சீஸ் பாஸ்தா!