கோடைக் காலத்தில் உண்டாகும் நீரிழப்பை ஈடுசெய்யவும், இழந்த ஆற்றலை மீட்கவும், தாகத்தைத் தணித்துக்கொள்ளவும், வெப்ப நோய்கள் தாக்காமல் பாதுகாத்து கொள்ளவும் பயன்படும் பாரம்பரிய பானங்கள் பல உண்டு. அவற்றில் முக்கியமானது இந்த தேங்காய் டிலைட். எளிமையாக வீட்டில் செய்யக்கூடிய இந்த டிலைட், உடலுக்கு உடனடி சக்தியைத் தரும்.
என்ன தேவை?
கெட்டி தேங்காய்ப்பால் – அரை கப்
இளநீர் – அரை கப்
தேன் – 2 டீஸ்பூன்
வறுத்து, அரைத்த உளுந்து மாவு – ஒரு டீஸ்பூன்
இளநீருடன் வரும் வழுக்கை தேங்காய் – 2 டீஸ்பூன்
ஐஸ் துண்டுகள் – 4
எப்படிச் செய்வது?
கெட்டி தேங்காய்ப்பால், இளநீர், தேன், உளுந்து மாவு, ஐஸ் துண்டுகளை சேர்த்து, மிக்ஸியில் நுரை வர அடிக்கவும். இதை டம்ளரில் ஊற்றி, இளநீர் வழுக்கையை மேலாக சேர்த்துப் பரிமாறவும்.