பீட்ரூட்டை ரத்தக் கிழங்கு என்றும் அழைப்பார்கள். இரும்பு, கால்சியம் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ள பீட்ரூட்டை உணவில் சேர்க்க பல இல்லத்தரசிகள் சிரமப்படுவார்கள். அவற்றை உங்கள் உணவில் சேர்க்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று இந்த பீட்ரூட் மில்க் ஷேக். வெயிலுக்கு இதமான, சத்தான இது அனைவருக்கும் ஏற்றது. பீட்ரூட் நம் உடலின் ரத்த அணுக்களை அதிகமாக்கும்.
என்ன தேவை?
பீட்ரூட் – 2
தேன் – 2 டேபிள்ஸ்பூன்
காய்ச்சி ஆறவைத்த பால் – 150 மில்லி
பட்டைப்பொடி – அரை டீஸ்பூன்
இஞ்சிச்சாறு – சிறிதளவு
வெனிலா ஐஸ்க்ரீம் – ஒரு ஸ்கூப்
எப்படிச் செய்வது?
பீட்ரூட்டை சிறு சிறு துண்டுகளாக்கி வேகவைத்துக் கொள்ளவும். வெந்த பிறகு தோலை நீக்கி மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். தேன், காய்ச்சி ஆறவைத்த பால், பட்டைப்பொடி, இஞ்சிச்சாறு ஆகியவற்றை இதனுடன் சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு வெளியே எடுத்து, வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு:
கேரட் மற்றும் பீட்ரூட்டை குழைய வேக வைத்தால், அதில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும்.
எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அரிசி உணவைத் தவிர்ப்பது நல்லதா?