கொளுத்தும் வெயிலைத் தணிக்க குளுமையான பானங்களை நாடுவோம். அந்த பானத்தில் சத்தும் நிறைந்திருந்தால், ‘டபுள் தமக்கா’தானே. அந்த ஆனந்தத்தை உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் வழங்கும், வீட்டிலேயே எளிமையாக செய்ய உதவும் இந்த பன்னா டிரிங்ஸ்.
என்ன தேவை?
புளிப்பில்லாத மாங்காய் – 2
சர்க்கரை – அரை கப்
ஏலக்காய்த் தூள் – கால் டீஸ்பூன்
கொரகொரப்பாக பொடித்த முந்திரி – 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மாங்காய்களைக் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து 3 விசில் வரும் வரை வேகவைக்கவும். பிறகு, இறக்கி ஆறவைத்து தோலை உரித்து, கைகளால் மசித்து எடுக்கவும் (கொட்டையை நீக்கி விடவும்). இத்துடன் 2 கப் தண்ணீர், சர்க்கரை, பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து `ஜில்லென பரிமாறவும்.
ஐஸ்க்ரீம், கூல் டிரிங்ஸ் சாப்பிட்டதும் சளி… தீர்வு உண்டா?