மழை என்றாலே பொதுவாக எல்லாருக்கும் பிடித்த ஒரு விஷயம். சிலருக்கு பிடிக்காமல் போகும். மழையில் நனைவதால் சிலருக்கு இருமல், சளி போன்ற விஷயங்கள் அடிக்கடி பிடிக்க ஆரம்பித்து விடும். மழைக்காலத்தில் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் போன்ற நோய்த்தொற்றுக்கள் அதிகரிக்க வாய்ப்புகள் நிறைய உண்டு. How to get rid of cold during rainy season?
இதனால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்திகள் குறைந்து உடலில் பலவிதமான நோய்களை ஏற்படுத்த ஆரம்பித்து விடும்.
எனவே இயற்கையாகவே நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல வழிகளை நாம் தேடுவோம்.
மருந்துகளை காட்டிலும் வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டே இதை நாம் சமாளிக்கலாம்.
பொதுவாகவே மழையில் நனைந்துவிட்டால் ஆரம்பத்தில் தொண்டைவலி வந்துவிடும். உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளித்து விடவேண்டும்.
எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை இது. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தை இது சரிசெய்யும். அதன் மூலம் சளியையும் குறைக்கும்.
வறண்ட இருமல் இருந்தால் அப்போழுது சிறிய துண்டு இஞ்சியுடன் உப்பை தூவவும். அதனை அப்படியே வாயில் போட்டுக்கொண்டு மெல்லவும். இஞ்சியுடன் துளசி இலையை சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
நான்கு அல்லது ஐந்து பூண்டுப் பற்களை எடுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து எடுத்து சாப்பிடவேண்டும். பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த வைத்தியம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
சூடான பாலில் மஞ்சள் சேர்த்துக் குடித்தால் சளியைப் போக்கலாம். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருள்கள் அடங்கியுள்ளன.
சின்ன வெங்காயத்தை எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 6-8 மணி நேரம் வரை தண்ணீரில் போட்டுக்கொள்ளுங்கள். இந்த நீருடன் சிறிதளவு தேனையும் சுவைக்காக சேர்த்துக் கொள்ளுங்கள். இதிலுள்ள தேன், அழற்சி எதிர்ப்பு பண்புகளை நமக்கு வழங்குகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள இயற்கை வழிமுறைகளுடன் நாட்டுகோழி, நண்டு, ஆட்டுக்கால் போன்ற வகையான சூப்களுடன் மிளகு தூளையும் சேர்த்து சாப்பிடலாம்.
அப்புறம் என்ன… மழையை என்ஜாய் பண்ணுங்க! How to get rid of cold during rainy season?
சுபஸ்ரீ
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…