how to get free pass in MTC?

இலவசப் பேருந்து பயணச்சீட்டை இணையதளம் மூலம் பெறுவது எப்படி?

தமிழகம்

தமிழ்நாடு அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழகங்கள்‌ மூலம்‌, இலவசப் பேருந்து பயணச்சீட்டு பயணிகளுக்கு
வழங்கப்பட்டு வருகிறது. அதனை தற்போது இணையதளம்‌ மூலம்‌ பெறுவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்துக்‌ கழகம்‌ செய்துள்ளது.

இந்த திட்டம் பல்லவன்‌ போக்குவரத்து அறிவுரைப்‌ பணிக்‌ குழு மற்றும்‌ தமிழ்நாடு மின்‌ ஆளுமை முகமையுடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி தலைமைச்‌ செயலகத்தில்‌ நேற்று நடைபெற்றது. இதில்‌, போக்குவரத்துத்‌ துறை அமைச்சர்‌ சா.சி.சிவசங்கர்‌ கலந்து கொண்டு இந்தத்‌ திட்டத்தை தொடங்கி வைத்தார்‌.

இலவசப் பயணச்சீட்டு பெறுவது எப்படி?

இனி, இலவசப்‌ பயணச்சீட்டு பெற்றுக்கொள்ள விரும்பும்‌ தகுதியுடையவர்கள்‌ அருகிலுள்ள இ-சேவை மையத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

அல்லது இணையதளம்‌ மூலமும் விண்ணப்பிக்கலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள  https://mtcbus.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் CONCESSION FARES  ஐ கிளிக் செய்து அதில் மாணவர்கள், பத்திரிகையாளர்கள், மாற்றுத்திறனாளிகள்‌, சுதந்திரப்‌ போராட்ட வீரர்கள்‌, தமிழறிஞர்கள்‌ மற்றும்‌ வயது முதிர்ந்தவர்களுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் தங்கள் விவரங்களை பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மீண்டும் அதே தளத்தில் அதனை அப்லோட் செய்து அதற்குரிய ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதனைத்தொடர்ந்து குறுஞ்செய்தி பயனாளியின்‌ கைப்பேசிக்கு வந்த பின்னர்‌ பயணச்சீட்டு அட்டையை பதிவிறக்கம்‌ செய்து இலவச பயணத்தை மேற்கொள்ளலாம்.

கிறிஸ்டோபர் ஜெமா

நெருங்கும் மழைக்காலம்… அதிகரிக்கும் கொரோனா: WHO எச்சரிக்கை!

பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிக்கை எப்போது?

 

 

+1
0
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0