கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வன பாதுகாவலர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பை தமிழக அரசு பணியாளர்கள் தேர்வாணையம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது
வரும் ஜூன் 9-ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில், குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் இன்று (மே 27) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில்,
“தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 01/2024, நாள் 30.01.2024- இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி-IV பணிகள்)-இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறி வகை (OMR முறை) தேர்வு 09.06.2024 முற்பகல் நடைபெற உள்ளது.
தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை(Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?
- TNPSC-இன் இணையதளமான tnpsc.gov.in க்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் இருக்கும் TNPSC குரூப் 4 ஹால் டிக்கெட் இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை சமர்ப்பிக்கவும்.
- ஹால் டிக்கெட்டை சரிபார்க்கவும்.
- ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சாமான்யன் – சாதித்தாரா? ராமராஜனின் புதிய பட வசூல் எவ்வளவு?
வெயிட் லாஸ் சிகிச்சை… மூடப்பட்ட மருத்துவமனையை திறக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு!