இன்று (அக்டோபர் 1) முதல் குடிநீர் வரி கட்டணங்கள் ரொக்கமாக பெறப்பட மாட்டாது என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அனைத்து பகுதி அலுவலகங்களில் செயல்பட்டுவரும் வசூல் மையங்கள் வழக்கம் போல் இயங்கும். ஆனால், பணிமனை அலுவலகங்களில் தற்போது செயல்படும் வசூல் மையங்கள் இன்று (அக்டோபர் 1) முதல் செயல்படாது.
குடிநீர் / கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணங்களைச் செலுத்தும் நுகர்வோர்களின் வசதிக்காக அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் பணிமனை அலுவலகங்களில் காசோலை / வரைவோலை பெறுவதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டண நுழைவாயில் (Online Gate Way) மற்றும் நெட் பேங்கிங் (Net Banking) மூலமாகச் செலுத்தலாம். மேலும் UPI, QR குறியீடு மற்றும் Pos போன்ற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் / கழிவு நீரகற்று வரி மற்றும் கட்டணங்களைச் செலுத்தலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!.
சண்டே ஸ்பெஷல்: அடிக்கடி ஏப்பம் விடுபவரா நீங்கள்… தீர்வு என்ன?
மூணு மாசத்துல நாலு மேட்டர்: அப்டேட் குமாரு
ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா-பத்து மாநாட்டுக்கு சமம்: திராவிட மாத நிறைவுரையில் ஸ்டாலின்