சத்துகள் நிறைந்த கீரைகளைச் சமைக்கும்போது சரியான முறையில் சமைக்காவிட்டால் அவற்றிலுள்ள வைட்டமின் சி உள்ளிட்ட சில அத்தியாவசிய சத்துகள் இழக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். கீரைகள் மட்டுமல்ல, புரொக்கோலி, லெட்டூஸ் போன்றவற்றை வேகவைக்கும் போதும் அவற்றிலுள்ள 50 சதவிகித வைட்டமின் சி இழக்கப்படுகின்றன. How to Cook Spinach Without Wasting its Nutrients
வைட்டமின் சி என்பது நீரில் கரையும் தன்மை கொண்டது என்பதால் திறந்தநிலையில் சமைக்கும்போது அந்தச் சத்தானது பறிபோகும் வாய்ப்புகள் மிக அதிகம். ஆவியில் வேகவைப்பதன் மூலம் கீரைகளில் உள்ள ஊட்டச்சத்துகளை தக்கவைக்க முடியும்.
துளி உப்பு சேர்த்த மிதமான வெந்நீரில் கீரைகளைச் சமைக்கலாம். கீரை வேக அதிக நேரம் எடுக்காது, சில நிமிடங்களில். அதாவது 3-5 நிமிடங்களில் வெந்து மென்மையாகிவிடும்.
மிகக் குறைந்த அளவு எண்ணெய்விட்டு மிதமான தீயில் கீரைகளை வதக்கி எடுப்பது இன்னொரு முறை. இந்த முறையிலும் கீரை மிருதுவாக வெந்துவிடும்.
`ஃபுட் ரெவல்யூஷன் நெட்வொர்க்’கின் தகவலின்படி, கீரைகளை ஆவியில் வைத்துச் சமைப்பதன் மூலம் அவற்றிலுள்ள ஆக்ஸாலிக் அமிலம் 5 முதல் 53 சதவிகிதம் வரை குறைவதாகத் தெரிய வந்திருக்கிறது.
தவிர அந்த முறையில் சமைப்பதால் கீரைகளில் உள்ள ஃபோலேட் சத்து (டிஎன்ஏ உற்பத்திக்கு உதவக்கூடிய ஒருவகை பி வைட்டமின்) தக்க வைக்கப்படுகிறது என்று தெரிகிறது.
கொதிக்கும் நீரில் கீரைகளை சில நொடிகள் போட்டு வைத்து, உடனே குளிர்ந்த நீரில் கழுவுவதும் ஆக்ஸலேட் அளவை கிட்டத்தட்ட 40 சதவிகிதம் வரை குறைப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
காய்கறிகளில் உள்ள சத்துகளைத் தக்கவைக்க அவற்றை மூடிவைத்தே சமைக்க வேண்டும். அது சமைக்கும் நேரத்தையும் மிச்சப்படுத்தும். சமைக்கும் உணவின் நிறம், மணம் மற்றும் ஊட்டச்சத்துகளையும் வெளியேறாமல் காக்கும்.
ஹோட்டல்கள் மற்றும் கேட்டரிங் சர்வீஸில் கீரையின் நிறத்தைத் தக்கவைக்க சமைக்கும்போது பேக்கிங் சோடா சேர்ப்பதுண்டு. அது மிகவும் தவறானது. பேக்கிங் சோடா சேர்ப்பதால் காய்கறிகள், கீரைகள் மென்மையாக வேகும். ஆனால் அவற்றின் உண்மையான வாசனையை மாற்றி, அவற்றிலுள்ள தயாமின் சத்தையும், வைட்டமின் சி சத்தையும் அழித்துவிடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: அரிசி மாவு டேப் சிப்ஸ்
கிச்சன் கீர்த்தனா: பிரெட் தவா பீட்சா
How to Cook Spinach Without Wasting its Nutrients