மொபைலை ஆன் செய்தால் உணவு ஆஃப்களின் மெசேஜ்கள் அணிவகுத்து நிற்கிற நிலையில் வீட்டிலேயே ஆரோக்கியமான உணவுகளைச் செய்து ருசிக்கலாம். அதற்கு இந்த சுவையான மலபார் பக்கோடா பெஸ்ட் சாய்ஸ்.
என்ன தேவை?
புழுங்கலரிசி – 2 கப்
காய்ந்த மிளகாய் – 6
பொட்டுக்கடலை மாவு – கால் கப்
கடலை மாவு – அரை கப்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
காய்ந்த மிளகாயைச் சிறிது நேரம் ஊற விடவும். புழுங்கலரிசியை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அரிசியைக் களைந்து காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவுடன் பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு சேர்த்து கெட்டியாகப் பிசையவும். எண்ணெயைக் காய விடவும். பிசைந்த மாவை ரிப்பன் பக்கோடா அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.