மாதத்தின் முதல் சண்டே. இந்த மாதத்துக்குத் தேவையான மளிகை சாமான்களை மொத்தமாக வாங்க கிளம்பிவிட்டீங்களா? ஒரு நிமிஷம்… இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்.
மளிகை சாமான்கள் வாங்குவதற்கு முன்பு வீட்டில் என்னென்ன இருப்பு இருக்கிறது என்று கணக்கெடுத்துவிட்டு இல்லாததை மட்டும் வாங்குங்கள். வீட்டில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் கண்ணில் தென்படுவதை எல்லாம் வாங்கினால், முந்தைய மாதம் வாங்கின பல பொருள்கள் வீணாகிவிடும். காசும் விரயமாகும்.
ஒவ்வொரு நாளும் என்னென்ன பொருள்களை குப்பையில் போடுகிறோம் என்றும் அதன் மதிப்பையும் குறித்துக்கொண்டே வாருங்கள். உதாரணத்துக்கு, ஒரு பாக்கெட் பனீர் வாங்கி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு மறந்துவிட்டோம். அது கெட்டுப்போய் குப்பைத் தொட்டிக்குப் போகும்போது ஒரு பேப்பரில் தேதி குறிப்பிட்டு, ஒரு பாக்கெட் பனீர் 75 ரூபாய் என குறிப்பிடுங்கள்.
இது போல ஒவ்வொரு நாளும் குப்பைத்தொட்டிக்குச் செல்லும் உணவுப்பொருட்கள் பற்றிய விவரங்களைக் குறித்து வையுங்கள்.
ஒரு மாதம் நிறைவடைந்ததும் ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டுப் பாருங்கள். அவ்வப்போது ஒன்றும் இரண்டுமாக பொருட்களை வீணாக்கும்போது நமக்குப் பெரிதாகத் தெரியாது.
அதை மொத்தமாகக் கணக்கிட்டுப் பார்த்தால்தான் அது எவ்வளவு பெரிய விரயம் என்பது தெரியும். அடுத்த முறை இதுபோல நடக்காமல் தவிர்க்க இந்த டெக்னிக் உதவும்.
ஆஃபரில் கிடைக்கிறது, பக்கத்து வீட்டில் வாங்கிவிட்டார்கள் என்று நாம் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தாத கருவிகள், பொருட்களை வாங்கி கிச்சனில் குவிக்க வேண்டாம்.
அதிகம் பயன்படுத்தாத பொருட்களைப் பராமரிப்பதும் சிரமம். கிச்சனில் இடத்தையும் அடைக்கும். அதேபோல உணவுப் பொருட்களையும் வாங்கி, பயன்படுத்தாமல் வைக்கும்போது கரப்பான்பூச்சி போன்றவையும் உருவாகி, பெருக வாய்ப்பாக அமைந்து விடும். இது ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம்.
குறைவான பொருட்கள் இருக்கும்போது கிச்சனும் சுத்தமாகவும் அழகாகவும் காட்சியளிக்கும். நல்ல மனநிலையில் சமைக்கவும் இது உதவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : அங்கூரி ரசகுல்லா
கிச்சன் கீர்த்தனா: மோத்தி லட்டு!
அண்ணே எனக்கு ஒரு டவுட்டு! – அப்டேட் குமாரு
விஜய்யின் மாநாட்டுக்கு பதிலடி… நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட பொன்முடி