நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர இன்று (செப்டம்பர் 22) முதல் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் இந்த ஆண்டு 1,32,167 மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். இதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தமிழகத்தில் உள்ள 39 அரசு மருத்துவக் கல்லூரிகள், 20 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு இன்று முதல் அக்டோபர் மூன்றாம் தேதி வரை www.tnhealth.tn.gov.in , www.tnmedicalselection.net ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்த நிலையில், கல்வி கட்டணம் செலுத்தும் நடைமுறையை தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு மாற்றி அமைத்துள்ளது.
கலந்தாய்வில் மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்ததும் அனைத்து கட்டணத்தையும் மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவிடம் செலுத்த வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?
- tnmedicalselection.net என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- இளங்கலை (யுஜி) எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., அட்மிஷன் 2022-23 என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அரசு ஒதுக்கீடு அல்லது நிர்வாக ஒதுக்கீட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- தகுதியான அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இன்று காலை 10 மணி முதல் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு மேற்கண்ட இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
செல்வம்
தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மிரட்டல் : திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை!